Tuesday, November 6, 2007

ஜாமிஆ அல் பாகியாதுஸ் ஸாலிஹாத்

தமிழகத்தின் நிர்வாகத் தலைநகராக சென்னை இருந்தாலும் தமிழக முஸ்லிம்களை பொறுத்த வரை வேலூர் அவர்களது சமயத்தலைநகராக இருந்தது இப்போதும் இருக்கிறது. அதற்கு காரணம் அங்குள்ள அல்பாகியபதுஸ்ஸாலிஹாத் அரபுக்கல்லூரி.

தென்னிந்திய முஸ்லிம்கள் தங்களது சமயப்பிரச்சினைகளுக்கு கடைசித் தீர்வாக பாகியாத்தை கருதுகிறார்கள்.
ஆல் போல் தழைத்துச் செழித்து உலகின் அத்தனை பகுதிக்கும் தனது விழுதகளை படரச் செய்திருக்கம் பாகியாத் எனும் ஒற்றைச் சொல் தென்னிந்திய முஸ்லிம்களை பரவசப்படுத்தும் ஒரு சொல்லாக நூறறைம்பது ஆண்டுகளாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவின் தென் மாநிலங்களில் தமிழகத்திலும் கேரளாவிலும் தனிப்பெரும் மரியாதையை பெற்ற நிறுவனமாக பாகியாத் உள்ளது. இந்தப்பகுதியில் மார்க்கக் கல்விப்பணி வாழவும் வளரவும் பாகியாத்தே வழிவகுத்தது. இப்பகுதியல் உள்ள அனைத்து அரபு மதரஸாக்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாகியத்தை தழுவியவையே.
கல்வித் துறையில் பிரமாண்டமாகவும் நவீனமாகவும் வளர்ந்து விட்ட பல நிறுவனங்கள் கேரளாவில் உருவாகிவிட்ட போதும் அங்கு பாகியத்திற்கான தனி மதிப்பு இன்னும் இருக்கிறது என்பது எதார்த்தம். தென்கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் பாகவிகள் சிறப்பான பணிகளால் தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே இஸ்லாம் தழைத்தக் கொண்டிருக்கிறது என்ற சொன்னால் அது தவறாகாது.
உலகின் மூளை முடுக்கஙெ;கும் பல்லாஙிரக்கணக்கான் நற்;செயல்களுக்கு பாகியாத் காரணமாக அமைந்தது. சில பெயர்ப் பொருத்தங்கள் கணகச்சிதமாக அமந்து விடுவதண்டு. அதற்கு மிகச்சரியான ஒர உதாரணம் மஹம்மது (ஸல்) என்ற பெயர் என்றால் அந்த வரிசையில் இடம் பெற்ற மற்றொரு உதாரணம் பாகியத்.
1857 ல் கருவான இந்நிறுவனம் இந்தியவில் பெதுவாகவும் தென்னிந்தியாவில் குறிப்பாகவும் இந்தப்பாணியில் அமைந்த மூத்த முதன்மையான நிறுவனமாக இருக்கிறது.
இந்த பிரமாண்டமான நிறவனத்தை நிறுவி தென்னிந்தியாவில் ஒரு அமைதியான மார்க்கப்புரட்சிக்கு வித்திட்ட மதிப்பும் மேன்மையும் பெருந்தகைதான் ஷம்சுல் உலமா அண்ணல் அஃலா ஹஜ்ரத் அவர்கள். ஆண்ணார் தமது தூய தொண்டின் பயணாய் தென்னிந்திய மக்களிடையே மிகப்பெரும் அங்கீகாரத்தை பெற்றிருந்தார்கள். அவர்களது வாழ்வும் வழிகாhட்டுதல்களும் என்றென்றைக்கும் தேவைப்படபவை.

2 comments:

Fahim said...

Understand QURAN - the Easy Way - For FREE

Learn Quranic Arabic, word by word translation of Quran, Quranic Grammar.

Take up the short course -last for less than 20 mins a day.
(We have spent more time on worldly education)

www.understandQuran.com - click => courses => short course => Language

Only English language course have full set.
Available in many languages.

Download slides (PPS/PPT) files and the respective audio (mp3)/video (wmv) files. - Listen audio while viewing slides.

For Children:
www.understandQuran.com – Click =>courses =>children => language.

காதிர் மீரான்.மஸ்லஹி said...

aalimgal enru yaduppar kaippillaiyaga iruppatharkku kaaranam.evargalai ponra maarkka kalvien magatthuvam theariyathavargalal than. surukkamaga solvathu yanraal.kiyamatthin pala adayalangalil onru...thaguthiyatravargal thalaivaraga aakkap padum pothu.....