Monday, June 18, 2012

0pen letter to alaudeen baqavi


அன்புள்ள சென்னை அண்ணா நகர் ஜாவித் பள்ளிவாசல் இமாம் அலாவுதீன் ஹஜ்ரத அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்.

பாகவிகளுக்கு அழைப்பு விடுத்து நீங்கள் ஒரு கடிதம் அனுப்பியிருப்பதாக ஒரு செய்தி எங்களுக்கு கிடைத்தது.

பாக்கியாத்தின் தற்போதைய நிலை உங்களுக்கு தெரிந்திருக்கும்.
·         மேல் விஷாரத்திற்கு கடிதம் எழுதி மாணவர்களை இரவல் கேட்பது.
·         தப்லீக் கூட்ட்த்தில் அசிரியர்களுக்கு அட்டெண்டெனஸ் எடுப்பது.
·         செயலாளர் ஹாஷிம் பலரது முன்னிலையில் நாஜிர் ஹஜ்ரத்தை நீ ஒரு முனாபிக் என்று புகழ்வது.
·         பாக்கியாத்தின் ஆசிரியர்கள் கண்மூடித்தனமாக நீக்கப்படுவது,
·         பாக்கியாத்தில் பாத்திரம் கழுவுவதற்கு அல்ல காவல் காரர் ரகீப்ஷாவாக இருப்பதற்கு கூட தகுதி அற்றவர்களை துணை முதல்வர்களாகவும் உஸ்தாதுகளாகவும் திணிப்பது,
·         பாகியாத்தில் ஒரு நாள் கூட காலடி பதித்திராத- உருது மட்டுமே தெரிந்த மூன்றாம் ஜும்ராவுக்கு பாடம் நட்த்த தகுதியற்றவர் என்று இகபால் காஸிமியால் சான்றளிக்கப் பட்ட ஒருவரை நாஜிராக்கும் திட்டத்தோடு காஷிபுல் ஹுதாவிலிருந்து இறக்குமதி செய்திருப்பது  
·         பாக்கியாத்தின் புகழ்பெற்ற முன்னோடிகளை பித்அத்திகளாக சித்தரிப்பது,
·         பாக்கியாத்தை பழிவாங்குவதை நோக்கமாக கொண்ட யாகூப் சாஹிப் பாக்கியாத்தின் கல்விக் குழுவில் உறுப்பினரக இருப்பது.
·         யாகூப் சாஹிப் நாஜிராக பாடம் நட்த்திக் கொண்டிருக்க பல்லாயிரக்கணகான மாணவர்களின் கிபலா வாக இருந்த கமாலுத்தீன் ஹஜ்ரத் பி எஸ் பி ஹஜ்ரத் ஆகியோர் வீட்டுக்கு அனுப்பப்பட்டது.
·         பாடம் நடத்த திராணியில்லை என்பதை மறைக்க மஃகூலாத் கிதாபுகளை எடுக்க முயற்சிப்பது,
·         அஃலா ஹஜ்ரத் காலத்தில் இல்லாத தப்லிக்கை பாக்கியாத்தில் திணிப்பது
·         மாணவர்களின் எண்ணிக்கை  உங்களது ஆதரவு பெற்ற நிலையங்களை விட மோசமாக குறைந்திருப்பது.
·         அஃலா ஹஜ்ரத்தின்  பத்வாக்களில் கையாடல் செய்வது
·         (கைரு முகல்லிதின் பின்னே நின்று தொழுதால் திருமபத் தொழ வேண்டும் என்பதே அஃலா ஹஜ்ரத்தின் பதவா என்ற உண்மை கடந்த மாதம் பாகியாத்தின் ஆசிரியர்கள் குழு கண்டு பிடித்துள்ளது.)
என நீண்டு கொண்டு போகும் பாக்கியாத்தின் தற்போதைய நிலை) உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

இந்த அக்கிரமங்களை எடுத்துக் கூறுவதால் நாங்கள் நல்ல பாகவிகள் அல்ல என்று உங்களுக்கு  தோன்றினால் அல்லாஹ் உங்களது பார்வைக்கு வெளிச்சத்தையும் கல்புக்கு ஹிதாயத்தையும் தரவேண்டும் என்று பிரார்த்திப்பதை தவிர வேறு வழி எங்களுக்குச் தெரியவில்லை.

ஒன்றை உங்களுக்கு ஞாபகப் படுத்துகிறோம். சென்னையில் இராயப்பேட்டையில் நடைபெற்ற பாகவிகளின் ஆலோசனை கூட்ட்த்திற்கு வருமாறு உங்களுக்கும் அழைப்புக் கொடுத்தோம்எங்களது மடியில் கனமில்லை. என்பதற்கான அடையாளம் அது.    பிரிட்டிஷ்கார்ர்களுக்கு ஆத்ரவாக காதியானிகள் கூடியது போல ஒரு பொதுவான அறிவிப்பில்லாமல் நீங்கள் இப்போது இரகசியமக ஒரு கூட்ட்த்தை கூட்டுகிறீர்கள், தொலைபேசி வழியே ஆதரவு திர்ட்டுகிறீர்கள். இது ஈமானுக்கு எந்த வகையில் உகந்த்து என்பது உங்களையும் ஹாஷிமையும் போன்ற மனிதர்களுக்குத்தான் வெளிச்சம்.

ஒரு வேளை நாங்கள் பாக்கியாத்தின் கொள்கை வழியிலிருந்து பிறழ்ந்து செல்வதாக நீங்கள் அறீந்தால் அதை சுட்டிக்காட்டுகிற கடமையும் பொறுப்பும் உங்களுக்கு உண்டு. பாக்கியாத்தின் போங்கில் இல்லாத எந்த வகையான பித் அத்திற்கு நாங்கள் வக்காலத்து வாங்கினோம் என்பதை நீங்கள் சுட்டிக் காட்டவேண்டும். இந்த விவகாரத்திலிருந்து இருட்டில் நின்று கொண்டு கல்லெறிவது போல இவர்கள் குராபிகள் பித் அத்திகள் என்று பிதற்றுவது சிறுபிள்ளைத்தனமும் கயமைத்தனமுமாகும். நல்ல ஆண்கள் இத்தகைய ஆதாரமற்ற பேச்சில் இறங்க மாட்டார்கள்,

யாகூப் விஷாரமியின் முன்னுரையை மட்டுமே படித்து விட்டு பாக்கியாத்தின் மஸ்லக்கை நீங்கள் புரிந்து கொண்டிருந்தால் அந்த பிற்போக்க் தனத்திற்கு நாங்க பொறுப்பேற்க முடியாது.,

பாக்கியாத்தின் கொள்கை வழி எது என்பது நமக்கிடையே கருத்து வேறுபாடு வரும் எனில் நாம் உட்கார்ந்து பேசுவோம். போதிய ஆதாரங்கள் உங்களிடம் இருக்கிறதா தெரியாது. ஆனால் எங்களிடம் உண்டு, அவற்றை நீங்களும் கூட மறுக்க முடியாது.

மீலாது மொலூது விச்யத்தில் மௌனம் சாதிக்கிற மனாறுல் ஹுதாவைப் போல நீங்கள் கபட நாடகம் ஆட மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

ம்க்களிடம் வெளிச்சமாக பேச வக்கற்றவர்களாக இருந்து கொண்டு மற்றவர்களின் சக்திகளை மாசுபடுத்தாதீர்கள். நாங்கள் எங்களது சொந்த அக்கறையில், சொந்த செலவில் பாக்கியாத்தின் மீதான அக்கறையில் ஒன்று திரண்டு என்ன செய்யலாம் என்று பேசிக்கொண்டுக்கிறோம், தமிழகத்தின் வஹாபிஸத்தை மறைவாக புகுத்தவும் அதற்கு ஆதரவாக பாக்கியாத்தை மாற்றவ்வும் நினைக்கிற காஷிபுல் ஹுதா அரபுக்கல்லூரியை சேர்ந்தவர்கள்  தகுதியும் சம்பந்தமும் இல்லாமல் பாக்கியாத்தின் மஸ்லக் குறித்து பேச தொடங்கிய போது பல தலைமுறைகளாக அஃலா ஹஜ்ரத்தின் வழியாக நாம் அறிந்த த்த்துவங்களை பேசிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் எங்களுக்கு ஏற்பட்டது.

உங்களை போல் , யாகூப் விஷாரமியின் மீது கொண்டிருக்கிற பக்தியை மட்டுமே ஆதாரமாக வைத்துக் கொண்டு சுன்னத் பித்அத்தையும் பேசுகிற பேசுகிறவர்கள் அல்ல நாங்கள். சுன்னத்களையும் பித் அத்களையும் ஓரளவு தெளிவாக விளங்கிக் கொள்ளவும் விளக்கிச் சொல்லவும் போதுமான தகுதி எங்களிடம் இருக்கிறது என்பதை அவையடக்கத்தோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். அது உங்களுக்கும் தெரியும்.

நீங்கள் ஒரு பாகவி என்ற  வகையில் பாக்கியாத்த்தின் மஸ்லஜ் குறித்து நாங்கள் நேரடியாக பேச தயாராக இருக்கிறோம் என்பதற்காகவே இந்தக் கடிதம் எழுதப் படுகிறது.

பாகவிகளின் முன்னிலையில் காஷிபுல் ஹுதாவின் ஆசிரியர் என்று சொல்லிக் கொள்ள வெட்கப் பட்டு நுங்கம் பாக்கம் இபுறாகீம் என்று சொல்லிக்  கொண்டிருக்கிற மௌலானா இபுறாகீம் பாகவி ஹஜ்ரத அவர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். உங்களிடமும் ஒரு கோரிக்கை.

பாக்கியாத்தைப் பற்றி கவலைப் படாமல் காஷிபுல் ஹுதாவிற்கு கூஜா தூக்கும்  நல்ல(?) பாகவியான தாங்கள்லிபாஸின் பாகவிகள் எந்த பித்அத்திற்கு ஆதரவு எப்படி தெரிவித்தார்கள் என்பதை விளக்க வேண்டும். இது தார்மீக கடமை.

அடுத்த்தாக அஃலா ஹஜ்ரத்தின் மகனார் அல்லாமா ஜியவுதீன் ஹஜ்ரத் நல்லவரா அல்லவா என்பதை விளக்க வேண்டும். அப்துர ரஹீம் ஹஜ்ரத், ஷேக ஆதம் ஹஜ்ரத் , அப்துல் ஜப்பார் ஹஜ்ரத், கமலூத்தீன் ஹஜரத் பிஎஸ்பி ஹஜ்ரத் போன்றவர்கள் எத்தையோர் என்பதை விளக்க வேண்டும்உங்களது கிபலாவான யாகூப் விஷாரமிக்கு இவர்கள் எந்த வகையில் குறைந்தவர்கள் என்பறகும் பதில் சொல்ல வேண்டிய தார்மீக பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.

நம்முடைய பாக்கியாதுஸ் ஸாலிஹாத் அரபுக்கல்லுரியை சரிவிலிருந்து மீட்க வேண்டு என்ற முயற்சியில் தன்னலம் பாரது நாங்கள் முன் முயற்சி எடுத்து இது பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற சூழலில் உங்களது சுய விருப்பத்தின் பேரில் எட்டப்பன் வேலைக்கு நீங்கள் ஆள் சேர்க்க்கிறீர்களே என்ற வேதனையில் இந்தக் கடிதம் இப்படி எழுதப் பட்டிருக்கிறது.

மீண்டும் ஒரு முறை மெத்த பனிவண்போடு கேட்கிறோம்எந்த வகையில் நாங்கள் பாக்கியாத்தின் போங்கிற்கு முரணான பித் அத்தை ஆதரித்தோன் என்பதை எங்களுக்கு சொல்வதற்காக அல்லாவிட்டாலும் உங்களுடைய மனசாட்சிக்கு சொல்வதற்காக யோசித்துப் பாருங்கள்.

நாம் பாகவிகள், நமது இலக்கு. பாக்கியாத்தின் மேம்பாடு ஒன்று மட்டுமே என்றால் எங்களுக்கு தலைமையேறக வருகை தருமாறு உங்களை அழைக்கிறோம்

உங்களுக்கு வேறு ஒரு நோக்கம் இருக்கிறது. அதற்காக அணி சேர்க்கிறீர்கள் என்றால் ஆலிம்களுக்களுக்கு இடையே ஒரு மோதல் போக்கு உருவாவதற்கு நீங்களே காரண என்பதை எச்சரிக்கிறோம்.  

இப்படிக்கு
கே. முஹம்மது பிலால் பாகவி

அபதுல் கையூம் மௌலானா பாகவி
இணைச் செயலாளர்கள்

0pen letter to alaudeen baqavi 1


open letter to alaudeen baqavi fro, libs 2


)pen letter to alavudeen baqavi from LIBASSaturday, March 3, 2012

திருச்சி தமிழ் மாநில மாநாடு

லஜ்னத்துல் இர்ஷாத் பாகவி ஆலிம் சங்கம் (லிபாஸ்)
“தென்னிந்திய முஸ்லிம்களின் சமய அணுகு முறையில்
பாக்கியாத்தின் தாக்கம் ”
தமிழ் மாநில மாநாடு

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். வரஹ்
நேரம் : 03.2012 செவ்வாயன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி
இடம் : அல்முஹம்மதிய்யா பள்ளிவாசல் வளாகம். தஞ்சாவூர் சாலை. திருச்சி

நிகழ்வு முறை :
8.00 திலாவத் மஜ்லிஸ்
9.00 உற்சாகத்திற்கு ஒரு சொல் –உரை
10.00 மஸ்லக் கருத்தரங்கு
02,30 உரை வீச்சு
0.3.30 மதரஸாக்களின் பின்னடைவுக்கு காரணம் - பட்டி மன்றம்.
07.00 மாபெரும் மீலாதுப் பொதுக் கூட்டம்

பங்கேற்போர் :
சங்கை மிகு காந்தபுரம் ஷைக் அபூபக்கர் ஹஜ்ரத் (கேரளா)
சங்கை மிகு முஹம்மது குட்டி ஹஜ்ரத் (அதிராம்பட்டினம்)
சங்கை மிகு சித்தீக் அலி ஹஜ்ரத் (சேலம்)
சங்கை மிகு ஜஹீர் ஹஜ்ரத (பெங்களூர் )
மற்றும் பல மூத்த ஆலிம் பெருந்தகைகள்
மான மிகு திருமாவளவன்
பிரின்ஸ் பாரகலீத்

இந்நிகச்சியில் பங்கேற்க ஆலிம்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
தமிழகத்தில் வஹாபிஸத்தின் மர்மக் கூட்டாளிகளாக இருக்கிற சில கசப்பு சக்திகள் தமிழ முஸ்லிம்களின் பாரம்ரியத்தை உருமாற்றம் செய்ய முயற்சி செய்து, அந்த முயற்சியில் வெகு தூரத்திற்கு வந்து விட்டனர். இந்த மாநாடு நமக்கு தெளிவுமிக்க தீர்வுகளை தருகிற நோக்கில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது,

ஆர்வம் மிக்க ஒவ்வொரு ஆலிம் பெருந்தகையும் இந்த மாநாடு தாம் கடமையாற்றுவதற்குரியது என்ற எண்ணத்தோடும் எழுச்சியோடும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். தயவு கூர்ந்து உங்களது வருகையை : 9865619562 என்ற எண்ணில் அழைத்து அல்லது SMS மூலம் பதிவு செய்யவும்.
இப்படிக்கு
லிபாஸ்

ரயீசுல் இஸ்லாம் ஹஜ்ரத் வபாத்

வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அர‌பிக் க‌ல்லூரியின் முன்னாள் பேராசிரிய‌ர் அல்ஹாஜ் ம‌வ்லானா ம‌வ்ல‌வி N. ர‌யீசுல் இஸ்லாம் ஹ‌ஜ்ர‌த் கிப்லா (சுமார் 85 வ‌ய‌து)
அவ‌ர்க‌ள் உட‌ல் ந‌ல‌க் குறைவால் 28-02-2012 செவ்வாய்க்கிழமை ம‌திய‌ம் சுமார் 3.00 ம‌ணிய‌ள‌வில் வேலூரில் வ‌ஃபாத்தானார்க‌ள்.

அன்னாரின் ஜ‌னாஸா புத‌ன்கிழ‌மை 29-02-2012 ளுஹ‌ர் தொழுகைகுப் பின்ன‌ர் வேலூரில் ந‌ல் அட‌க்க‌ம் செய்ய‌ப்ப்பட்டது. ஜ‌னாஸா தொழுகை வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அர‌புக்க‌ல்லுரி பள்ளிவாசலில் நடைபெற்றது.

ஜனாஸா தொழுகைக்கு முன் பாகியாத் அரபுக்கல்லூரியில் நடை பெற்ற இரங்கல் கூட்டத்தில் பாகியாத்தின் முதல்வர் உஸ்மான் முஹ்யித்தீன் ஹஜ்ரத், பெங்களூர் அஸ்ரப் அலி ஹஜ்ரத், ஜஹீர் ஹஜ்ரத், லிபாஸின் பிரதிநிதிகளாக மௌலவி அப்துல் அஜீஸ் பாகவி, மௌலவி யூசுப் பாகவி ஆகியோருடன் பாகியாத்தின் முன்னாள் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஜனாஸா தொழுகையில் பாகியாத்தின் செயலாளர்,ஹாஷிம் சாஹிப் ஷப்பீர் அலி ஹஜ்ரத், பி.எஸ்.பி ஹஜ்ரத் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்ட மிகுதியின் காரணமாக பள்ளிவாசலில் உட்பகுதியில் ஜனாஸா தொழுகை நடத்தப் பட்டது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு மதிய உணவு மதரஸாவின் சார்பில் அஜீஜிய்யா ஷாதி கானாவில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து, தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் அனைவ‌ரும் துஆ செய்வோமாக‌. ஆமீன்

Tuesday, February 28, 2012

லஜ்னத்துல் இர்ஷாத் பாகவி ஆலிம் சங்கம் (லிபாஸ்)
“தென்னிந்திய முஸ்லிம்களின் சமய அணுகு முறையில்
பாக்கியாத்தின் தாக்கம் ”
தமிழ் மாநில மாநாடு


அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். வரஹ்
நேரம் : 03.2012 செவ்வாயன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி
இடம் : அல்முஹம்மதிய்யா பள்ளிவாசல் வளாகம். தஞ்சாவூர் சாலை. திருச்சி

நிகழ்வு முறை :
8.00 திலாவத் மஜ்லிஸ்
9.00 உற்சாகத்திற்கு ஒரு சொல் –உரை
10.00 மஸ்லக் கருத்தரங்கு
02,30 உரை வீச்சு
0.3.30 மதரஸாக்களின் பின்னடைவுக்கு காரணம் - பட்டி மன்றம்.
07.00 மாபெரும் மீலாதுப் பொதுக் கூட்டம்

பங்கேற்போர் :
சங்கை மிகு காந்தபுரம் ஷைக் அபூபக்கர் ஹஜ்ரத் (கேரளா)
சங்கை மிகு முஹம்மது குட்டி ஹஜ்ரத் (அதிராம்பட்டினம்)
சங்கை மிகு சித்தீக் அலி ஹஜ்ரத் (சேலம்)
சங்கை மிகு ஜஹீர் ஹஜ்ரத (பெங்களூர் )
மற்றும் பல மூத்த ஆலிம் பெருந்தகைகள்
மான மிகு திருமாவளவன்
பிரின்ஸ் பாரகலீத்

இந்நிகச்சியில் பங்கேற்க ஆலிம்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
தமிழகத்தில் வஹாபிஸத்தின் மர்மக் கூட்டாளிகளாக இருக்கிற சில கசப்பு சக்திகள் தமிழ முஸ்லிம்களின் பாரம்ரியத்தை உருமாற்றம் செய்ய முயற்சி செய்து, அந்த முயற்சியில் வெகு தூரத்திற்கு வந்து விட்டனர். இந்த மாநாடு நமக்கு தெளிவுமிக்க தீர்வுகளை தருகிற நோக்கில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது,

ஆர்வம் மிக்க ஒவ்வொரு ஆலிம் பெருந்தகையும் இந்த மாநாடு தாம் கடமையாற்றுவதற்குரியது என்ற எண்ணத்தோடும் எழுச்சியோடும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். தயவு கூர்ந்து உங்களது வருகையை : 9865619562 என்ற எண்ணில் அழைத்து அல்லது SMS மூலம் பதிவு செய்யவும்.
இப்படிக்கு
லிபாஸ்

Tuesday, February 21, 2012

கேரளா பாகவிகள் சந்திப்பு

அல்லாஹ்வின் கிருபையால் கேரள மாநில பாகவிகள் சந்திப்பு நிகழ்ச்சி கோழிக்கோட்டில் உள்ள் கோழிக்கோடு டவர் அரங்கில் 16.02.2012 அன்று அகில இந்திய பாகவி அஸோஷியேசன் தலைவர் அஷ்ஷைக் காந்தபுரம் அபூபக்கர் பாகவி தலைமையில் நடைபெற்றது. கர்நாடகத்திலிருந்து மௌலானா ஜகீர் ஹஜ்ரத அவர்களும் தமிழகத்திலிருந்து மௌலானா P.A, காஜா முஈனுத்தீன் ஹஜ்ரத், அப்துல் அஜீஸ் பாகவி, பீர் முஹம்மது பாகவி, திருச்சி பிலால் பாகவி ஆகியோரும் ஆந்திரா தமிழகத்திலிருந்து மற்ற பல பாகவிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பாகியாத்தின் செயலாளர் அல்ஹாஷிம் அவர்களிடம் முன்வைக்கப் பட உள்ள ஒரு கோரிக்கை பற்றி முடிவு செய்த்ததுடன் கேரளா பாகவி அஸோஸியேன் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.