Tuesday, February 28, 2012

லஜ்னத்துல் இர்ஷாத் பாகவி ஆலிம் சங்கம் (லிபாஸ்)
“தென்னிந்திய முஸ்லிம்களின் சமய அணுகு முறையில்
பாக்கியாத்தின் தாக்கம் ”
தமிழ் மாநில மாநாடு


அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். வரஹ்
நேரம் : 03.2012 செவ்வாயன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி
இடம் : அல்முஹம்மதிய்யா பள்ளிவாசல் வளாகம். தஞ்சாவூர் சாலை. திருச்சி

நிகழ்வு முறை :
8.00 திலாவத் மஜ்லிஸ்
9.00 உற்சாகத்திற்கு ஒரு சொல் –உரை
10.00 மஸ்லக் கருத்தரங்கு
02,30 உரை வீச்சு
0.3.30 மதரஸாக்களின் பின்னடைவுக்கு காரணம் - பட்டி மன்றம்.
07.00 மாபெரும் மீலாதுப் பொதுக் கூட்டம்

பங்கேற்போர் :
சங்கை மிகு காந்தபுரம் ஷைக் அபூபக்கர் ஹஜ்ரத் (கேரளா)
சங்கை மிகு முஹம்மது குட்டி ஹஜ்ரத் (அதிராம்பட்டினம்)
சங்கை மிகு சித்தீக் அலி ஹஜ்ரத் (சேலம்)
சங்கை மிகு ஜஹீர் ஹஜ்ரத (பெங்களூர் )
மற்றும் பல மூத்த ஆலிம் பெருந்தகைகள்
மான மிகு திருமாவளவன்
பிரின்ஸ் பாரகலீத்

இந்நிகச்சியில் பங்கேற்க ஆலிம்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
தமிழகத்தில் வஹாபிஸத்தின் மர்மக் கூட்டாளிகளாக இருக்கிற சில கசப்பு சக்திகள் தமிழ முஸ்லிம்களின் பாரம்ரியத்தை உருமாற்றம் செய்ய முயற்சி செய்து, அந்த முயற்சியில் வெகு தூரத்திற்கு வந்து விட்டனர். இந்த மாநாடு நமக்கு தெளிவுமிக்க தீர்வுகளை தருகிற நோக்கில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது,

ஆர்வம் மிக்க ஒவ்வொரு ஆலிம் பெருந்தகையும் இந்த மாநாடு தாம் கடமையாற்றுவதற்குரியது என்ற எண்ணத்தோடும் எழுச்சியோடும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். தயவு கூர்ந்து உங்களது வருகையை : 9865619562 என்ற எண்ணில் அழைத்து அல்லது SMS மூலம் பதிவு செய்யவும்.
இப்படிக்கு
லிபாஸ்

Tuesday, February 21, 2012

கேரளா பாகவிகள் சந்திப்பு

அல்லாஹ்வின் கிருபையால் கேரள மாநில பாகவிகள் சந்திப்பு நிகழ்ச்சி கோழிக்கோட்டில் உள்ள் கோழிக்கோடு டவர் அரங்கில் 16.02.2012 அன்று அகில இந்திய பாகவி அஸோஷியேசன் தலைவர் அஷ்ஷைக் காந்தபுரம் அபூபக்கர் பாகவி தலைமையில் நடைபெற்றது. கர்நாடகத்திலிருந்து மௌலானா ஜகீர் ஹஜ்ரத அவர்களும் தமிழகத்திலிருந்து மௌலானா P.A, காஜா முஈனுத்தீன் ஹஜ்ரத், அப்துல் அஜீஸ் பாகவி, பீர் முஹம்மது பாகவி, திருச்சி பிலால் பாகவி ஆகியோரும் ஆந்திரா தமிழகத்திலிருந்து மற்ற பல பாகவிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பாகியாத்தின் செயலாளர் அல்ஹாஷிம் அவர்களிடம் முன்வைக்கப் பட உள்ள ஒரு கோரிக்கை பற்றி முடிவு செய்த்ததுடன் கேரளா பாகவி அஸோஸியேன் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.