Tuesday, February 21, 2012

கேரளா பாகவிகள் சந்திப்பு

அல்லாஹ்வின் கிருபையால் கேரள மாநில பாகவிகள் சந்திப்பு நிகழ்ச்சி கோழிக்கோட்டில் உள்ள் கோழிக்கோடு டவர் அரங்கில் 16.02.2012 அன்று அகில இந்திய பாகவி அஸோஷியேசன் தலைவர் அஷ்ஷைக் காந்தபுரம் அபூபக்கர் பாகவி தலைமையில் நடைபெற்றது. கர்நாடகத்திலிருந்து மௌலானா ஜகீர் ஹஜ்ரத அவர்களும் தமிழகத்திலிருந்து மௌலானா P.A, காஜா முஈனுத்தீன் ஹஜ்ரத், அப்துல் அஜீஸ் பாகவி, பீர் முஹம்மது பாகவி, திருச்சி பிலால் பாகவி ஆகியோரும் ஆந்திரா தமிழகத்திலிருந்து மற்ற பல பாகவிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பாகியாத்தின் செயலாளர் அல்ஹாஷிம் அவர்களிடம் முன்வைக்கப் பட உள்ள ஒரு கோரிக்கை பற்றி முடிவு செய்த்ததுடன் கேரளா பாகவி அஸோஸியேன் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.





Wednesday, December 7, 2011

அன்னம் பதில்

சமநிலைச் சமுதாயம் டிஸம்பர் மாத இதழில் காஷிபுல் ஹுதா மதரஸாவின் மறுப்புகளுக்கும் சொதப்பல்களுக்கும் அன்னம் வழங்கியுள்ள பதிலை படிக்க கீழே கிளிக் செய்யவும்.
http://writerannam.blogspot.com/2011/12/blog-post.html

Monday, December 5, 2011

அன்பு நிறைந்த ஆலிம்களே நணபர்களே

அன்பு நிறைந்த ஆலிம்களே! நணபர்களே!
பாகியாத்தின் வரலாறு மற்றும் மஸ்லக் பற்றி காஷிபுல் ஹுதாவிலிருந்து வெளிவருவருகிற மனாருக் ஹுதா மாத இதழில் வெளியான செய்திகள் குறித்து பலரும் அதிருப்தியும் கோபமும் அடைந்துள்ளனர் என்பதை நாம் அறிவோம்.

உத்தமர்களாவும், புத்திசாலிகளைப் போலவும் வேடமிட்டு புரட்டு வாதம் செய்வோர் அவர்களது ஆட்களை திருப்திப் படுத்துவதற்காக அல்லது தங்களது மனப் புகைச்சலை தீர்த்துக் கொள்வதற்காக " நாங்களும் எழுதிட்டோமல்லே " என்று காட்டுவதற்காக நிறையப் பக்கங்களை பாழ்படுத்தியுள்ளனர்.

எனினும் தொடர்ந்து இவர்கள் எந்த தப்பு வாதங்களை தப்பாது செய்து வருகிறார்களோ அதெற்கெல்லாம் பதிலளிக்க வேண்டியது நம்முடைய கடமை என்பதை லிபாஸ் உணர்ந்திருக்கிறது. பாகியாத்தின் வரலாறு பாகியாத்தின் மஸ்லக், பாகியாத்திற்கும் தப்லீக்கிற்கும் இடையே உள்ள தொடர்பின் நிலை, மௌலானா யாகூப் விஷாரமி செய்து வருகிற ஒரு தலைப்பட்சமான பொய்ப்பிரச்சாரம் அவர் பயன்படுத்திய குயுக்தியான வழிகள் இன்றைக்கு பாகியாத் அடைந்திருக்கிற பின்ண்டைவு அதை மேம்படுத்து வதற்கான தீர்வுகள் வழிமுறைகளைப் பற்றி விரிவான ஒரு தகவல் கையேட்டை லிபாஸ் தாயாரித்து வருகிறது. பாகியாத் உள்ளிட்ட பல அரபு மதரஸாக்களின் முதர்ரிஸ்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் விரைவில் இதுபற்றிய தொகுப்பு நூல் வெளியிடப்படும்,தொடர்ந்து காஷிபுல் ஹுதா செய்து வரும் மறைமுக வஹாபிஸம் பற்றி விழிப்புணர்வை மக்கள மத்தியில் ஏற்படுத்த தமிழகத்தின் பல பகுதிகளில் மாநாடுகளை நடத்தவும் லிபாஸ் திட்டமிட்டுள்ளது.

உங்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் எங்களுக்கு எழுதுங்கள். வஸ்ஸலாம்.
libas07@gmail.com

Monday, October 24, 2011

Saturday, October 15, 2011

பாகவிகள் சந்திப்பு பற்றி உருது பத்ரிகை செய்திகள்



பாகவிகள் சந்திப்பு பற்றி இரண்டு உருது பத்ரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.