Monday, November 5, 2007

கோவை பயிலரங்கம்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 23.10.2007 ம் தேதி செவ்வாய்க்கிழமை கோவை சங்கமம் திருமண மண்டபத்தில் ஆலிம்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் காலை 10 மணிக்கு துவங்கியது.லிபாஸின் தலைவர் மௌலானா அல்ஹாஜ் ஜியாவுத்தீன் ஹஜ்ரத் தலைமை தாங்கினார். கேiவை ராம்நகர் பள்ளிவாசல் இமாம் பாருக் ஹஜ்ரத் கிராத் ஓத, ஏரல் பீர்முஹம்மது பாகவி கீதமிசைக்க மேலப்பாளையம் காஜா முஈனுத்தீன் பாகவி அவர்களின் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த 65 உலமாக்கள் மிகுந்த ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆரம்பமாக மொழிவளம் குறித்து வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியின் முன்னாள் தமிழ்துறை தலைவர் பேராசரியர் தி.மு. அப்துல் காதிர் அவர்கள் வகுப்பு நடத்தினார்கள். வாரந்தோரும் ஜும்ஆ மேடை வழியாகவும் இன்னும் பல கூட்டங்கள் வழியாகவும் மக்களை சந்தித்து உரையாடுகிற வாயப்புப் பெற்ற உலமாக்கள் தங்கள் மொழிவளத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் அதற்கான பயிற்சி பற்றியும் தன் உரையில் தெளிவாக குறிப்பிட்டார்கள். உலமாக்களுக்கு மிகவும் பயனுள்ள உரையாக இது அமைந்தது. அடுத்து ஆளுமைத் திறன் என்ற தலைப்பில் கோவையைச் சார்ந்த ஜனாப். நாஸர் அவர்கள் வகுப்பு நடத்தினார்கள். இவர் இந்தியாவில் மட்டுமின்றி பல வெளிநாடுகளுக்கும் சென்று தன்முனைப்பு பயிற்சி நடத்துகிற ஒரு சிறந்த பயிற்சியாளர். பெப்ஸி போன்ற பல முன்னணி நிறுவனங்கள் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி இவரைக் கொண்டு தமது ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றன. அத்தகைய ஒரு சிறந்த இளம் பயிற்சியாளரான இவர் சுமார் 2 மணிநேரங்கள் சுவை குன்றாது தன் பயிற்சி வகுப்பபை நடத்தினார். இவரது உரை வித்தியாசமாகவும் ஆலிம்களுக்கு மிகவும் பிரயேஜனமாகவும் இருந்தது.ளுஹர் தொழுகைக்கும் மதிய உணவிற்கும் பிறகு வேலூர் அல்பாகியாதுஸ்ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பி.எஸ்.பி.ஜைனுல் ஆபிதீன் ஹஜ்ரத் அவர்கள் ஆன்மீக ரீதியில் ஆலிம்கள் தங்ளை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்தவம் பற்றி உரை நிகழ்த்தினார்கள். தமது பழைய மாணவர்களை சந்தித்த நெகிழ்ச்சி அவர்களுக்கும் தமது ஆசானை சந்தித்த மகிழ்ச்சி மாணவர்களுக்குமாக ஒரு இனிய அனுபவமாகவும் அவர்களது உரை அமைந்திருந்தது. ஆதன் பின்னர் அரசியல் அதிகாரம் என்ற தலைப்பில் கோவை அரசு கலைக் கல்லூhயின் அரசியல் அறிவியல் துறை விரிவுரையாளர் போராசிரியர் கணகராஜ் அவர்கள் பேசினார்;. இந்திய அரசியல் அமைப்பு பற்றியும் அரசியலில் பங்கேற்கும் வழிமுறை பற்றியும் குறிப்பாக வாக்குச்சீட்டின் வலிமையைப் பற்றியும் சுருக்கமான நேரத்தில் தெளிவான கருத்துக்களை எடுத்துரைத்தார். நிறைவாக கோவை அப்துல் அஜீஸ் பாகவி கணிணியின் பயன்பாடு பற்றியும் இன்டர் நெட்டில் மலிந்து கிடக்கிற தகவல் களஞ்சியங்கள் பற்றியும் செயல்முறை விளக்கப் பயிற்சியளித்தார். மாலை 5 மணிக்கு நிறைவு செய்யத் திட்டமிட்டிருந்த நிகழ்ச்சி இடைவெளி இல்லாமல் இரவு 7 மணிவரை நீண்டது எனினும் பலரும் அர்வத்தோடு பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அதே போல வருகை தந்த ஒவ்வொரு ஆலிமும் ரூபாய் 50 பதிவுக்கட்டணம் செலத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருக்குர்ஆன், ஹதீஸ் திரட்டு, இஸ்லாமிய வரலாறு ஆகிய தலைப்புக்களை கொண்ட குறுந்தகடுகளும் இன்டர்நெட்டிலிருந்து இறக்கம் செய்யப்பட்ட மின்னனு நூலான இமாம் நவவி (ரஹ்) அவர்களின் புஸ்தானுல் ஆரிபின் என்ற நூலின் அச்சுப்பிரதியும் வழங்கப்பட்டன.இன்ஷா அல்லாஹ் வருகிற 2008 பிப்ரவரி மாதத்தில் ஆலிம்களின் சொற்பொழிவுத்திறனை மேம்படுத்து வகையில் தகுந்த நபர்களைக் கொண்டு சேலம் நகரில் ஒரு நாள் பயிற்சி பட்டரை நடத்துவது என்ற தீர்மாணத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்

No comments: