Tuesday, November 6, 2007

தொடக்க விழா தீர்மாணங்கள்

அல்லாஹ்வின் கிருiபாயல் கடந்த 11.07.07 . புதன் அன்று மதுரை சர்வேயர் காலனி முனவ்வரா கல்வி வளாகத்தில் நடைபொற்ற லஜ்னத்துல் இர்ஷாத் பாகவி ஆலிம்கள் சங்கமம் தொடக்க விழா அண்ணல் அஃலா ஹஜ்ரத் அவர்கள் நினைவு விழா கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மாணங்கள்.
இஸ்லாம் எனும் சத்திய நெறியை சளைக்காமல் போதிக்கவும் சுன்னத்தை பின்பற்றி பித்அத்களை களைவும் அண்ணல் அஃலா ஹஜ்ரத் அவர்களின் வழிகாட்டுதலக்கு ஏற்ப உற்சாகத்தோடும் ஊக்கத்தோடும் செயலாற்றுவது என லஜனத்துல் இர்ஷாத் உறுதி ஏற்கிறது.
தென்னிந்தியாவில் தீன் பயிர் வளரவும் செழிக்கவும் உழைத்த அண்ணல் அஃலா ஹஜ்ரத் அவர்களுக்கும் அவர்களுக்கு துணை நின்ற பெரியோர்களுக்கும், உதவியாக இருந்த புரவலர்களுக்கும் லஜ்னதுல் இர்ஷாத் தனது மனமார்ந்த நன்றியை காணிக்கையாக்கி, அன்னார்களது பிழைகளை மன்னித்து உயர்ந்த மறுமைப் பேற்றை அவர்களுக்கு வழங்குமாறு வல்ல நாயனை இக்கூட்டம் உள்ளம் உருக இறைஞ்சுகிறது.
அல்பாகியாதுஸ்ஸாலிஹாhத்தின் தற்போதைய விடுதி வளாகத்தை அற்புதமாக நிர்மாணித்து, பேராசிரியப் பெருமக்களுக்கு தகுந்த ஊதிய உயர்வும் குடியிருப்பு வசதியும் செய்து கொடுத்த இப்போதைய நிர்வாகக்குழுவினருக்கும் இவற்றை பொறுப்பேற்றுச் செய்த மலக் முஹம்மது ஹாசிம் அவர்களுக்கும் இக்கூட்டம் மிகுந்த நன்றியை தெரிவத்துக் கொள்கிறது. அன்னாருக்கும் அவருக்கு துணை நின்றோருக்கும் ஈருலக உயர் பாக்கியங்களை அல்லாஹ் வழங்க வேண்டுமென இக்கூட்டம் இறைஞ்சுகிறது.
வேலூ}; அல்பாகியாதுஸ்ஸாலிஹாhத் அரபுக்கல்லூரிக்கு தென்னிந்தியாவின் தாய்க்கல்லூரி என்ற அந்தஸ்த்தும் பொருமையும் தொடர்ந்து நீடிக்குச் செய்யவும் பாகவிகளின் எண்ணிக்கை பெருகவும் பயின்ற கல்லூரியின் மீதான நன்றியுனர்வின் அடிப்படையில் பாகியாத்தின் நலனில் அக்கறை கொண்டு செயல்படவும் இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.
தமிழகத்தில் நிலவிய பாரம்பரிய வழக்கப்படி பாகியத்தின் பத்வாவின் அடிப்படையில் மார்க்க விசயங்களுக்கு முடிவு காணும் நடைமுறையை பரவலாக்க கவனம் எடுத்தக் கொள்வது என்றும் இக்கூட்டம் தீர்மாணிக்கிறது. பாகியாத்தின் பத்வா தொகுப்புக்களை தமழில் வெளிக் கொண்டுவர முயற்சி மேற் கொள்வதெனவும் இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.
அல்பாகியாதுஸ்ஸாலிஹாhத்திற்கு பேராசிரியர்களை நியமிப்பதில் தென்றதொட்டு கடைபிடிக்கப்பட்ட வரும் அடிப்படைகளை தொடாந்து கைகொள்ளுமாறு மதிப்பு மிகுந்த பாகியாத் நிர்வாகக் குழுவை இக் கூட்டம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறது.
பாகவி ஆலிம்களிடையே ஒருங்கிணைப்பை எற்படுத்த வசதியாக அவர்களின் தகவல் வங்கி ஒன்றை உருவாக்குவதென இக்கூட்டம் தீர்மாணிக்கிறது. இதற்காக தங்களிடமுள்ள தகவல்களை அனுப்பித்தருமாறு தனது உறப்பினர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. அல்பாகியத்தின் 150 ஆண்டின் நினைவாக அண்ணல் அஃலா ஹஜ்ரத் மற்றும் மன்னோடி பாகவிகளின் வாழ்கை வரலாற்ற ஆய்வுத்தொகுப்பு ஒன்றை வெளியிடுவதென இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.
மக்களுக்கு தேவைப்படும் விசயத்தில் சட்டத் தெளிவை வழங்கவும் ஜனரஞ்சக ஊடகங்களில் இஸ்லாம் குறித்து வெளியாகும் தவறான விமர்ச்சனங்களுக்கு தக்க முறையில் பதில் பதில் தருவது எனவும் இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.
ஆண்டு தோறும் ஒரு தகுந்த பாகவியை தேர்வு செய்து அவருக்கு ரூ10,000 வழங்குவதென இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.
ஜும்ஆ உரைகளை நெறிப்படுத்தவும் செறிவூட்டவும் ஆனைத்து இமாம்களுக்கும் பயனளிக்கும் வகையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை லிபாஸ் ஜும்ஆ வாய்ஸ் என்ற பிரசுரம் ஒன்றை வெளியிடுவது எனவும் இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.
இணைய தளம் ஒன்றை உருவாக்கி அதில் பாக்கவிகள் பற்றி தகவல்களையும் அவர்களது சேவைகளையும் பாகவிகளின் சிறந்த சொற் பொழிவுகளையும் இடம் பெறச் செய்வது எனவும் இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.
இன்றைய உலகின் தேவைக்கு ஏற்ப பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களை கொண்டு அனைத்து அலிம்களும் பயன்பெறும் வகையில் ஒரு நாள் பயிலரங்கு ஒன்றை இன்ஷா அல்லாஹ் வரகிற 2007 அக்டோபர் 23 ம் தேதி (ஷவ்வால் பிறை 10) கோவையில் நடத்துவது என இக்கூட்டம் தீர்மாணிக்கிறது.