Thursday, May 15, 2008

சிகரத்தை நோக்கி - லிபாஸ் சேலம் பயிலரங்கு

' நான் பள்ளிவாசல் இமாம் பேசறேன்.. இன்டெர்நெட் கத்துக்கணும் எப்ப வரட்டும்? இரவு பத்துமணிக்கு அலைபேசியில் வந்த இந்த திடீர் கோரிக்கை ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இப்போதைக்கு பல ஆலிம்கள் கம்ப்யூட்டர் படிக்க தயாராகிவிட்டார்கள் என்பதல்ல படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே தகவல்.இளம் மற்றும் முதிய ஆலிம்களிடம் எப்படி இந்த திடீர் மாற்றம்?
அந்த அரபுக் கல்லூரி உஸ்தாதுக்கு வயது அறுபதுக்கும்மேல் இருக்கும். ஈரோடு ஜமாஅத்துல் உலமாவின் எழுச்சி மாநாட்டில் சந்தித்தபோது அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி தம்பி... கம்ப்யூடடர் வாங்கணும். எது வாங்குனா நல்லா இருக்கம்? நெறயா கிதாபுகள் சிடியில் வந்துக்ருகாமே? இது போன்ற விசாரிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஆம் 12-12-2008 அன்று சேலத்தில் பாக்கவி ஆலிம்கள் சங்கமம் (லிபாஸ்) நடத்தியா ஒருநாள் பேச்சுத்திறன் மேம்பாட்டு பயிற்சியில் அளிக்கப்பட்ட 'இணைய தளங்களில் இனிய பயன்கள் என்ற இன்டெர்நெட் பயிற்சி இந்த உரையாடல்களுக்கு மூலதனம்.
சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் அதிரடியாக கலந்துகொண்ட அந்தப் பயிலரங்கு ஆலிம்களின் ஒரு சரியான நகர்வை அடையாளப் படுத்தியது. பலதரப்பு ஆலிம்களிடமும் தாங்கள் சம காலத்தின் தேவைகளுக்கும் முன்னேற்றத்திற்கும் ஏற்ப தங்களை மென்மேலும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்தற்கான ஆர்வாம் அலாதியாக வெளிப்பட்டதை வெளிப்படையாகவே காண முடிந்தது. அதனால்தான் அவர்கள் தொலைதூரங்களை, குறித்த நேர உணவுகளை சொந்த செலவுகளை பொருட்படுத்தவில்லை தனக்கு ஏற்பட்ட சிரமங்களை (முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள் பேரவையின் செயல்பாடுகளைப் பற்றி மட்டுமே இன்றுவரை பேசிக்கொண்டிருக்கிறார்கள். எப்போது ஆலிம்கள் நிறைகளை பேச ஆரம்பித்தார்களோ அப்போதே அவர்கள் முன்னேற்றத்தின் முதல் படியை முத்தமிட ஆரம்பித்துவிட்டார்கள் .
பயிலரங்கின் நிகழ்ச்சி நிரல் பல பகுதிகளிலிருந்தும் வருகிற உலமாக்களின் காலத்தின் அருமை கருதி கச்சிதமாக திட்டமிடப்பட்டிருந்தது.
முதல் அமர்வில் உத்தமபாளையம் அப்துஸ் ஸமது அவர்கள் ஆலிம்கள் தங்களது ஜும்ஆ உரைகளை எப்படி இலக்கிய நயமாக மாற்றுவது என்பது குறித்து மிக எளிய நடையில் எடுத்துச் சொன்னார். எனக்கு பக்கத்திலிருந்த ஒரு இளம் ஆலிம் இலக்கியம்னா .. என்ன மோன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். இவ்வளவு தான்னு லேசா சொல்லிட்டாரே! என்று சொன்னபோது முதல் உரையே ஆலிம்களை பயிலரங்குள் ஈர்த்து விட்டதை கண்டுகொண்டேன். வேறு பல பயிலரங்குகள்க்கு சென்றுள்ள நான் இந்தப் பயிலரங்கு எப்படி நடத்தப் படுகிறது. அது என்ன () விளைவை தருகிறது என்பதை கவனிப்பதிலேயே குறியாக இருந்தேன். பேராசிரியர் விருந்தாளியாக வந்து பேசிவிட்டு செல்லாமல் விரும்பி வந்து பாடம் நடத்திவிட்டுச் சென்றிருக்கிறார். மின்சாரம் தடை பட்ட போதும் அவரது வ்ரையிலிருந்த பவர் குறையவில்லை. பேச்சை முடித்துக் கொண்டு அவர் காரில் ஏறப் போன போது '' தமிழ் இலக்கியத்தை சுவைக்க நான் என்ன நூல்களைப் படிக்க வேண்டும்? என்று முதிய ஆலிம் ஒருவர் இடைமறித்துக் கேட்டது இப்போதும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.
இரண்டாம் அமர்வு, இட நெருக்கடிய தவிர்க்க முதன் முறையாக நாற்காலிகளை காரலி செய்துவிட்டு அந்த நானூறு பேரும் கீழே இறங்கி தரையில் அமர்ந்தார்கள். இடமின்மையால் சிலநூறு கால்கள் வெளியே நின்றுகொண்டிருந்தன.
இரண்டாம் அமர்வு ஆலிம்களுக்கு சில புதிய திசைகளை அறிமுகப்படுத்தியது. சேலம் பிரின்ஸ் பாரக்லீத் ஆலிம்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும். சர்வதேச சுயமுன்னேற்ற பயிற்சியாளரான அவர் மிக எளிய முறையில் ஒரு தரமான மேடைப் பேச்சு எப்படி இருக்க வேண்டும் அற்புதமாக பயிற்சியளித்தார். ஆலிம்கள் இரு ஒண்ணற மணி நேரம் அவரது பயிற்சியில் கட்டுண்டு கிடந்தார்கள். எல அஸரத்துமார்களையே கட்டிப் போட்டுட்டாரிலே என்று ஒரு நெல்லைத் தமிழ் விமர்சனம் என் காதில் விழுந்தது.

தமிழகமெங்கும் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தும் பிரின்ஸ் பாரக்கலீத தமிழக உலமாக்களுக்கு சலுகைக் கட்டணத்தில் கணினி கற்றுத் தர முன் வந்த்துள்ளார்.
மூன்றாம் அமர்வில் ஈரோடு நைனார் ஹஜ்ரத் அவர்கள் சமுதாயப் பணியாற்றும் ஆலிம்களிடம் நிறைந்திருக்க வேண்டிய இறைவணக்கம், இறைதியானம், ஒழுக்கப் பண்புகள் குறித்து மிகுந்த அக்கறையோடு நினைவூட்டினார்கள். தன்னால தொடர்ந்து பேச இயாலாது சொல்லிவிட்டு திரளான ஆலிம்களை கண்ட ஆர்வத்தில் மிக எதார்த்தமாக ஹஜரத் அவர்கள் பேசிய அந்தப் பேச்சில் பாகியாத் அரபுக்கல்லூரியின் முன்னாள் ஆசிரியப் பெருந்தகைகளின் இறையச்சமும் பேணுதலும் மிக்க வாழ்க்கைச் செய்திகளை சொன்னபோது பலரது கண்களிலும் கண்ணீர்த்துலிகள் கட்டிநின்றன,
நான்காம் அமர்வு அதி அற்புதமானது. கோவை அப்துல் அஜீஸ் பாக்கவி இணைய தளங்களில் குர்ஆன், ஹதீஸ் பிக்ஹ், அகீதா, தப்சீர்களை பார்ப்பது எப்படி? உருது தமிழ் பயான்களை கேட்பது எப்படி? ஜூம்ஆ பயான்களுக்கு தேவையான குறிப்புகளை எடுப்பது எப்படி? ஒரு தலைப்பில் இண்டர் நெட்டில் சாதரணமாக நாம் தேட முற்படுகிற போது எவ்வளவு அதி அற்பிதமான தகவல்களை விரல் சொடுக்கும் நேரத்தில் நான் பெற்றுக் கொள்ள முடிகிற என்று கூறிய ஜம் ஜம் குறித்து தான் தேடிய போது தன்க்கு கிடைத்த ஆச்சரியமான தகவல்களைப் பற்றி குறிப்பிட்டது பல்ருக்குள்ளேயும் நாளைக்கே கம்புயூட்டர் கீ போர்டில் கை வைத்து விட வேண்டும் என்ற ஆர்வத்தை வெளிப்படுத்து வதாக இருந்தது. அவர் சொன்ன ஒரு கருத்து மிக முக்கியமானது. பெரிய ஊர் சிற்றூர் என்ற வித்தியாசமில்லாமல் தெருமுணைகள் தோறும் இண்டர்நெட் மையங்கள் வந்துவிட்டன. அதைப் பார்க்கிற எந்த ஆலிமும் இது தனக்காவே திறக்கப் பட்டிருப்பதாக கருத வேண்டும். ஏனெனில் மற்றெவருக்கும் பயன்படுவதைவிட அதிகமாக அது அவருக்கு பயன்படும் என்றார் அவர். ஆலிம்களின் சில சந்தேகங்களுக்கு பதிலளித்த அவ்ர் இணையத்தில் ஆங்கிலத்தில் மட்டுமல்லாது அரபி உருது தமிழ் மொழியிலும் ஏராளமான இணையத்தளங்கள் இருப்பதை எடுத்துக் கூறினார். அரபி, தமிழ் மொழிகளிலும் விசயங்களை தேடி எடுத்துக் கொள்ள முடியும் என்பதையும் தெளிவுபடுத்தினார். நேரமின்மை காரணமாக குறைந்த கால அளவிலே நிகழ்சி முடிக்கப் பட்டதால் ஆலிம்களின் கம்ப்யூட்டர் சம்பந்தமான வேறு பல கேளிகளுக்கு வாய்ப்பளிக்க முடியவில்லை. இது கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படைப் ப்யிற்சி அல்ல என்று அவர் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்திய போதும் பற்றி முதன் முறையாக கம்யூட்டர் பற்றி அறிகிற சிலருக்கு இன்னும் நிறை தெளிவுகள் தேவைப்பட்டது. இவ்வரங்கு கணினி அது தொட்டு விடும் தொடும் தூரத்தில்தான் என்ற என்ற உணர்வை பலருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. இன்டெர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர் வாங்க பலரும் உறுதி பூண்டுள்ளனர். அதுவரை பலரும் இப்போது பிரவ்சிங் சென்டருக்குகள் அமர்ந்து கொண்டு தன் சந்தேகங்களுளை செல்போனில வழியே கேட்டுக் கொண்டிப்பதாக தகவல்.
இறுதி அமர்வாக, ஜும்ஆ பயன் வீணடிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு காரணம் என்ன என்ற தலைப்பில் ஒரு விவாத அரங்கு நடைபெற்றது. பதினோறு காரணங்களை சொல்லி உலமாக்கள் தங்களை தாங்க்ளே பர்சீலித்துக் கொண்டது. மிக அருமையாகவும் சுவையாகவும் இருந்தது.
உரிய நேரத்தில் தயாரிக்க முயற்சிசெய்யாமல் கடைசீ நேரத்தில் உரை தேடுவது, , சமுதாய அக்கறையின்மை, மொழிவளமின்மை, லட்சியமின்மை, மனத்தூய்மையின்மை, குறிப்புத்தாள் இன்மை, பொறுப்பின்மை ஆதாரமின்மை நிர்வாகத் தலையீடு, வழிகாட்டுகிற அம்சங்கள் இன்மை ஆகிய இளம் ஆலிம்கள் கருத்துரை வழங்கியது அனைவரையும் சிந்திக்க வைத்தது.
ஆலிம்கள் சிரிப்போடும் அதே நேரத்தில் மிக எச்சரிக்க்கையோடும் தன்களைத் தாங்களே பழுத்து பார்த்துக்கொண்ட இவ்வரங்கு, இனிமேல் நிச்சயம் ஜும்ஆ உரைகளில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டிருந்தது. இவ்வரங்கில் சொல்லப் பட்ட சில தகவல்கள் அது பற்றி நினைக்கும் போதெல்லாம் அடக்கவியாலாத சிரிப்பையும் தேவையான எச்சரிக்கையையும் தந்து கொண்டிருக்கிறது, கடைசி நேர அவசரத்தில் குத்பா கிதாபுக்கு பதிலாக மய்பதி கிதாபை எடுத்துச் சென்றவர் பட்ட பாடு, சைத்தானுக்கு ரொட்டி தர்மம் செய்ய நேர்ச்சை செயதவரால் எற்பட்ட பிரச்சனை, வ அலல் மவ்லூதி லஹூ ரிஜ்குஹுன்ன என்ற வசனமும் தொடர்ந்து வ அலல் மூஸிஈ கத்ருஹு வ அலல் முக்திரி கத்ருஹூ வசனமும் ஆதாரமாக காட்டப்பட்டது, போன்ற பல விசயங்கள் அரங்கிற்கு சுவையூட்டிய செய்திகள். மற்ற ஏராளமான தகவல்கள் ஜுமா உரைகளை தரப்படுத்திக் கொளவதர்கான அக்கறையான விசயங்களாக இருந்தன. மைக் உட்பட மற்ற விசயங்களை காரணமாக பேசிக் கொண்டிராமல் தங்களைச் சார்ந்த விசயங்களையே அலசிக் கொண்டது முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய அம்சமாக இருந்தது.
சேலம் உலமாக்கள் மற்றும் பிரமுகர்களின் உழைப்பும் உபசரிப்பும் நெகிழ்சிக்கும் பாராட்டுதலுக்கும் உரியது. தமிழக உலமாக்களுக்கு ஒரு திருப்திகரமான திருப்புமுனையான ஒரு பயிலரங்கை லிபாஸ் அமைப்பு வழங்குவதற்கு அவர்கள் மிகச்சிறந்த உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கியதோடு நிர்பந்த சூழ்நிலைகலை சிறப்பாக அவர்கள் கையாண்டார்கள். உலமாக்களின் மிகுந்த ந்ன்றிக்குரியவர்கள் அவர்கள்.
தமிழகமெங்கம் இப்போதைய ஜும்ஆ பயான்களில் ஒருவித புதுமாற்றம் ஏற்பட்டிருப்பதை காதுகளால் கேட்க முடிகிறது. இதற்கான பெரும் பங்கு 'லிபாஸ் அமைப்பையே சாரும்

இந்நிகழ்சிக்காக நன்றி தெரிவிக்க லிபாஸின் செயலாளருடன் தொடர்புகொண்ட போது அது ஒரு பேட்டி போலவே அமைந்தது. அதை அப்ப்டியே இங்கு தருகிறேன்.

ஒரு புதுமையான ஆலிம்கள் மீது அக்கறை கொண்ட நிகழ்சியை வெற்றிகரமாக நடத்தினீர்கள்! மிக்க நன்றி.

அல்ஹம்துலில்லாஹ். சேலம் நகரில் இந்நிகழ்சிக்காக உழைத்த அத்துனை ஆலிம்களுக்கும் அவர்களோடு தோளுரச உழைத்த சேலம் நகர பிரமுகர்களுக்கும் முதல் நன்றிக்குரியவர்கள். பொதுக் காரியத்திற்காக உழைப்பதை ஒரு இனிய அனுபவமாக அவர்கள் வைத்திருக்கிறார்கள், நிகழ்சி முடிந்து நாட்கள் பல ஒடிவிட்டன என்றாலும் சிந்தனை முழுக்க அவர்களது ஒத்துழைப்பும் உபசரிப்பும் ஒடிக்கொண்டிருக்கிறது. இரண்டாவதாக, தமிழகத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் திரளாக கலந்து கொண்ட ஆலிம்கள் ந்ன்றிக்குரியவர்கள். அதிகப் பட்சமாக இருநூற்றைம்பது நபரளுக்காக செய்யப் பட்டிருந்த ஏற்பாட்டை 500 க்கும் மேற்பட்டோர் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட போது அவர்கள் முகம் சுளிக்காமல் அதை ஏற்றுக் கொண்டு நன்றீ தெரிவித்து சென்றது நெகிழ்சியளித்தது, எங்களது அழைப்பை எற்று நிகழ்ச்சியை சிறப்பித்த நைனார் முஹம்மது ஹஜ்ரத், பேராசிரியர் அப்துஸ் ஸமத், அருமை சகோதரர் பிரின்ஸ் பாரகலீத் ஆகியோரும் லிபாஸின் பணிகளில் தொடர்ந்து ஆர்வமூட்டி வரும் நண்பர்களும் பிரமுகர்களும் மிகுந்த நன்றிக்குரியவர்கள்.

ஆலிம்களின் உன்னதமான அந்த சகிப்புத்தன்மை அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. சிறிய விசயத்திற்கொல்லாம் கோபப் படுபவர்கள் என்ற இமேஜ் காணாமல் போயிருந்தது. அது மட்டுமல்ல நாம் கற்க வேண்டிய பல விசயங்கள் உண்டு என்ற எண்ணமும் அதை கற்கும் அவர்களது ஆர்வமும் கூட புதுமையானதாக இருந்தது. இனி பல ஊர்களிலும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். அது பற்றி என்ன நினைக்கிரீர்கள்.

வரவேற்கிறோம். அப்படி நடக்க வேண்டும் என்பது தான் எங்களது எண்ணமும், தமிழகம் முழுக்க ஏழாயிரம் ஆலிம்கள் இருகிறார்கள். பல் தகுதி வாய்ந்த அமைப்புக்கள் உள்ளன. அவர்கள் ஒவ்வொருவரிடமும் நாம் எந்த வகையில் பணியாற்ற முடியும் என்ற கேள்விய இந்நிகழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

இதே வகையில் செயல்பட விரும்புகிறவ்ர்ர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அவர்களுக்கு ஆலோசனைகள் சொல்லும் அள்வுக்கு நாங்கள் இன்னும்ம் வளரவில்லை. என்றாலும் சில கருத்துக்களை நட்பு முறையில் சொல்ல முடியும். ஈயடிச்சான் காப்பி என்பது போல நிகழ்சிகளை அமைக்க வெண்டியதில்லை. பல் வேறு பட்ட தளத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆற்ற வேண்டியிருக்கிறது. அதே போல கலந்து கொள்வோரின் பொன்னான காலத்தை கருத்தில்கொண்டு திட்டமிட்ட தர்மான நிகழ்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆர்வக் கோளாரால் நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டு அது இத்தைகைய முயற்சிகளை முணை மழுங்கச் செய்வதாக ஆகிவிடக் கூடாது.

நிகழ்ச்சி உங்களுக்கு முழு மன நிறைவை தந்ததா?

அதிக மகிழ்ச்சிதான், ஆனால் முழு நிறைவு என்று சொல்ல முடியாது.
எதனால் அப்படி?

ஒரு பயிலரங்கு என்பது ஒரு வழிப் பாதையாக மட்டும் இருக்கக் கூடாது, கலந்து கொண்டவர்களிடம் அந்த பயிலரங்கு ஏற்படுத்திய தாக்கம் குறித்து அப்போதே ஒரு டெஸ்ட் நடைபெற்றிருக்க வேண்டும். அதில் பயிலரங்கில் பேசப் பட்ட விசயங்களை எந்த அளவு உள்வாங்கியிருக்கிறோம் என்பது தெளிவாக வேண்டும். தனிப்பட்ட ஒவ்வொருவ்ரும் தான் என்ன மாற்றத்திற்கு தயாராக வேண்டும் என்பதை அறிய வேண்டும் அப்போது தான் பயிலரங்கு முழுமையடையும்.

அது நடை பெறாததற்கு என்ன காரணம்?

இது முதல் நிகழ்சி என்பது தான் முதல் காரணம். கலந்து கொண்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததும் கடைசி நேர நெருக்கடிகளும் திட்ட்மிட்டிருந்தவற்றை முழுமையாக தர முடியாமலாகிவிட்டது.

ஜும்மா உரைத் தொகுப்பு எதிர்பார்த்த அளவு இல்லையே?

அது வாஸ்த்தவம் தான். எந்த அமைப்பில் உரைக் குறிப்பு தருவது என்பதில் எங்களுக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டது. அப்படியே போய் வாசித்து விடலாம் என்ற அமைப்பில் இருக்கக் கூடாது. உரையாற்றுபவருக்கு ஒரு உதவியாக அவரது சிந்தனைகளை தூண்டி அவராகவே ஒரு தயாரிப்புக்கு தயாராகும் அளவு வரவேண்டும் என்பதை அட்ப்படையாக வைத்திருந்தோம். ஒரு வருடத்திற்கான உரையை ஜெராகஸ் பிரதியாக சுமார் 150 பேருக்கு வழங்குவது என்று திட்டமிட்ட போது ஒரு உரை ஒரு பக்கத்துக்குள் அமைய வேண்டும் என்று திட்டமிட்டோம். அந்த சுருக்க நடவடிக்கை சில இட்ங்களில் ஒரு இருண்மை ஏற்பட காரணமாகிவிட்டது. அது போல பல மூத்த ஆலிம்களின் ஜும்ஆ உரைகள் கடைசி நேரத்தில் எற்பட்ட சில தொழில்நுட்பச் சிக்கலால் இடம் பெறச் செய்யமுடியவில்லை. ஆயினும் சந்தர்ப்ப சூழ்நிலைக் கேற்ற வாறு தேடிக்கொள்ள உதவும் பல தலைப்புக்கள் அதில் உண்டு. ஒரே மாதிரியான போங்கைத் தவிர்த்து வித்தியாசமான ஒரு சில கண்னோட்டத்தையும் அதில் பார்க்கலாம். இந்தக் குறிப்புக்களை சீர்படுத்தி விசேஷ காலங்களுக்குரிய உரைகளையும் சேர்த்து ஒரு புத்தகமாக அச்சிடும் திட்டம் இருக்கிறது.

ஆலிம்களின் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது?

ஒவ்வோரு வாரமும் உரைத்தயாரித்தவர்களுக்கு தொலபேசி வழியான விசாரிப்புக்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. முழு தொகுப்பாக இருக்கவேண்டும் என்று நினைத்தவர்கள் கூட எங்களது கருத்து சரியானது தான் என்று ஒத்துக் கொண்டார்கள், அது ஆரோக்கியமான ஒரு விமர்சனாமாக இருந்தது. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் விமர்சனங்களை சொல்பவர்கள் கூட எதோ நல்லது செய்யனும் என்று முன்வதிருக்கிறார்கள் அவர்களை குறை சொல்லக் கூடாது என்ற உணர்வோடு கருத்துக் கள் சொன்னது வியப்பளித்தது,

லிபாஸைத் தொடர்ந்து மற்ற சிலரும் ஜும் ஆ உரைத்த் தொகுப்புக்கள் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களே!

எங்களது எண்னம் பெரிதும் வெற்றியடைந்த விசயம் அது. உருதுவில் ஏராளமான குத்பாத் தொகுப்புக்கள் இருக்கின்றன. தமிழிலிலும் அது போன்ற் தொகுப்புக்கள் வர வேண்டும், தகுதியான பல உலமாக்கள், அவர்கள் தேடித்திரட்டிய உரைத் தொகுப்புக்களை வருங்கால தலைமுறைக்கு உதவும் வகையில் வழங்க முன்வர வேண்டும், காலம் கடந்து அவர்கள் வாழ அது உதவும். உருதுவில் இருக்கிற சில குத்பா தொகுப்புக்கள் மிக சாதரணாமான தகவலகளை கொண்டவையாக இருக்கின்றன.ஆயினும் அவை கூட சமசந்தர்ப்பத்திற்கு உதவுகிறது. நம்முடைய தமிழ் உலமாக்கள் பலரின் உரைக் குறிப்புக்கள் தொகுத்து வழங்கப் பட்டால் அது அற்ப்தமான தொகுப்பாக இருக்கும். இந்த வகையில் அவர்கள் ஊக்கம் பெற் வேண்டும் என்பதே எங்களது பிரதான நோக்கம். அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப் படுமானால் உலமாக்களின் பேரதவு அதற்கு கிடைக்கும் என்பதை லிபாஸின் இந்தக் கூட்டம் சந்தேகத்திற்கிடமில்லாமல் தெரிவித்து விட்டது. ஜுமா உரைகளை முழுமையாக வரிவடிவில் தருவது என்று யோசித்தால் அது சாத்தியப் படாமல் போகலாம். அதனால் ஜும் ஆ உரைகளை, விளங்கிக் கொள்ளத்தகுந்த குறிப்புக்களின் வடிவத்தில் கொடுப்பது யாருக்கும் மிக எளிதானது. உரைக் குறிப்புக்களை முழு உரையாக் வழங்க வேண்டும் என்று பல்ரும் எண்ணியதே தமிழில் குத்பாத் தொகுப்புக்கள் வெளிவருவதற்கு பெரும் தடையாக இருந்தது. இப்போது ஒரு மாடல் கிடைக்கிருப்பதாக பல்ரும் சொன்னார்கள். இந்த வடிவில் இன்னும் கொஞ்சம் மெருகூட்டி நாமும் வழங்களாமே என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கருத்தை ஆலிம் சமுதாயத்திற்கு தெரிவிக்க நினைத்தோம். அது போய்ச் சேரவேண்டிய இடத்தை சென்றடந்து விட்டது. இனி இதில் ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டால் அது கூட வரவேற்கத் தக்கது தான், லிபாஸ் இனி வரும் ஆண்டுகளிம் ஆல்ம்களின் தனித்தனியான உரைக் குறிப்புக்களை வெளிக் கொண்டு வரும். (இன்ஷா அல்லாஹ்)

அந்த் சி டி?
பயிலரங்கில் கல்ந்து கொண்டவர்களுக்கு வழங்கப் பட்ட சி டி “வோர்ட்” “பிடிஎப்” வடிவிலான பல பயன்மிகுந்த மின்னணு கிதாபுகளை கொண்டது, அதை கம்ப்யூட்டரில் தான் பார்க்க முடியும். இந்நிகழ்ச்சிக்கு பிறகு கம்ப்யூட்டரை சொந்தமாக வாங்கிய ஒரு மௌலவி அரரஹீக்குள் மக்தூம் நூலை அதில் பார்த்து விட்டு. ஹஜ்ரத் எதோ சில பக்கங்கள மட்டும் கொடுத்திருப்பீர்கள் என்று நினைத்தான் கிதபு முழுசா இருக்கே ரொமப ஆச்சரியாம இருந்துச்சு என்றார். கம்ப்யூட்டரோடு தொடர்புள்ள பல நண்பர் சி டி அபாரம் என்று பாராட்டினார்கள். இவ்வளவு கிதபுகளும் இண்டெர்நெட்டில் இலவசமாக கிடைக்கிறது என்பதை தெரிவிப்பதற்காகவே ஆலிம்களுக்கு இந்த சி டியை வழங்கினோம்.

லிபாஸ் பாகவிகளுக்கு மட்டுமே உரியதா?

இந்தக் கேள்விக்கு மிக்க நன்றி. பாகவிகள் சம்பந்தப் பட்ட் சில தனிப்பட்ட கவலையின் காரணாமாகவே லிபாஸ் துவங்கட்டது. அந்த வகையில் அதற்கு சில திட்டவட்டமான நோக்கங்களும் செயல் திட்டங்களும் உண்டு, ஆனால் ஆலிம்கள் முன்னேற்றம் மற்றும் நலன் சார்ந்த விசயங்களில் அது அனைத்து ஆலிம்களுக்கும் பொதுவான நன்மை யோசிக்கவும் செயல் படுத்தவும் கூடியது, தன்னை யாரிடமிருந்தும் பிரித்துப் பார்க்கும் எண்ணம் லிபாஸிற்கு இல்லை, அது போல யாரும் தன்னைப் பிரித்துப் பார்க்க வேண்டாம் என்று லிபாஸ் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது,

லிபாஸின் அடுத்த திட்டம்?
வருகிற ஜீலை மாதம் 1 ம் தேதி செவ்வாய்கிழமை அன்று திருநெல்வேலியில் தலைமை பண்பு பயிற்சி முகாம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.(இன்ஷா அல்லாஹ்) காலை 6.30 மணிக்கு உடற்பயிற்சியில் தொடங்கி தமிழக முஸ்லிம்களின் உட்பிரிவு ச்ச்சரவுகளை சமாளிக்கும் வழி முறை தொடர்பான ஆலிம்களின் விவாத அரங்கோடு மாலை 6 மணிவரை நடைபெற இருக்கிறது. தலைமைப் பண்புப் பயிற்சி, பல் சமய அறிமுகம், இந்திய சமூகத்தில் முஸ்லிம் தலித் உறவு, தமிழக முஸ்லிம் சமுகத்தில் பெண்களின் நிலை ஆகிய தலைப்புக்கள் சார்ந்து உரைகளும் விவாதங்களும் நடத்த திட்டமிடப் பட்டிருக்கிறது. தீர்வுகளும் வழிகாட்டுதல்களும் ஆராயப் பட இருக்கின்றன.

இதில் அனுமதி எப்படி?

நிகழ்சிக்கான அறிவிப்பு வெளியான பிறகு பதிவு செய்து கொள்ளும் ஆலிம்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப் படும், அழைப்பிதழ் உள்ளவர்களுக்கு மட்டும் தகுந்த வசதிகள் செய்து தரப்படும்,
லிபாஸின் மற்ற பணிகள் ?
லிபாஸ் தனது சில அடிப்படை அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது, முதலாவதாக தமிழகம் முழுவதிலும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற பாகவிகள் பற்றிய தக்வல்களை திரட்ட உள்ளோம், தற்போது சுமார் இருநூறு பாகவிகள் பற்றிய தகவல்கள் இண்டெர்னெட்டில் வெளியிடப் பட்டுள்ளது. மற்றவகளைப் பற்றிய தகவல்களை திரட்டிக் கொண்டிருக்கிறோம், libas07.blogspot.com இணய தளத்தில் தமிழக பாகவிகள் பட்டியல் மாவட்ட வாரியாக தரப்பட்டுள்ளது. இது எங்களிடமிருக்கிற தற்போதைய தகவல்களை கொண்டு தயாரிக்கப் பட்டது. இன்னும் நிறைய திரட்ட வேண்டியிருக்கிறது. இது முழமையடைய ஆலிம்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். இன்ஷ அல்லாஹ் வருகிற அக்டோபர் முதல் வாரத்தில் அண்ணல் அஃலா ஹஜ்ரத் நினைவு விழாவை மதுரையில் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். அதில் தென்னிந்திய முஸ்லிம்களின் வாழ்வில் அஃலா ஹஜ்ரத் அவர்களின் மார்க்கப் பணியின் தாக்கம் குறித்து ஆய்வுக் கருத்தரங்கு நடைபெற இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பாகவிகளின் சமய சமுதாயப் பணிகளை திரட்டவும் ஆய்வு செய்யவும் எண்னியிருக்கிறோம். இந்தப் பணிகளை செவ்வனே நிறைவேற்ற உங்களது துஆ வையும் நல்ல ஆலோசனைகளையும் தாருங்கள்.