Sunday, January 6, 2008

12.2.2008 - சேலம் பயிலரங்கு



இன்ஷா அல்லாஹ் வருகிற பிப்ரவரி பணிரெண்டாம் தேதி செவ்வய்க் கிழமை காலை ஒன்பது மணிமுதல் மாலை வரை சேலம், கோரிமேடு (ஏற்காடு ரோடு) கே.வி.மன்ஜிலில் இளம் ஆலிம்களின் சொற்பயிற்சித்திறனை மேம்படுத்தும் நோக்கில் தமிழகம் தழுவிய ஒரு நாள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இந்நிகழ்சியில் சொற்பயிற்சித்திறன் மேம்பாடு குறித்த பல் வேறு அம்சங்கள் விளக்கப்பட உள்ளன. குறிப்பாக வெள்ளி மேடை உரைகளை தரமாகவும் ஓரேமாதிரியாகவும் அமைத்துக்கொள்வதற்கான வழிவகைகளை ஆய்வு செய்வதுடன், உருதுவில் இருப்பது போல சிறப்பாக உரையாற்றுவோர் தங்களது உரைத்தொகுப்புக்களை எழுத்து வடிவில் கொண்டு வர ஆர்வமூட்டி அதற்கான ஆவணங்களை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதனுடைய முதல் முயற்சியாக தமிழகத்தில் சிறப்பாக சொற்பொழிவாற்றும் பிரபலமான ஆலிம்களின் ஜும் ஆ உரைக்குறிப்புக்களின் ஒரு ஆண்டுக்காண தொகுப்பை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தகவல்களை திரட்டிக் கொள்ள உதவுகிற இணய தளங்களை அறிமுகப்படுத்தவும் இணையப் பயன்பாட்டில் ஆர்வமுட்டவும் திட்டமிடப் பட்டுள்ளது.
இப்பயிலரங்கில் கலந்து கொள்வோருக்கு மின்னணு கிதாபுகளின் குறுந்தகடு ஒன்றை வழங்குவதோடு, அவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்து அதன் வழியாக குழு கலந்துரையாடலுக்கும் விரைவான தகவல் பரிமாற்றத்திற்கும் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள ஆலிம்கள் அனைவரும் பிப்ரவரி 12 ம் தேதி செவ்வாய்க் கிழமைய முழுவதுமாக ஒதுக்கி இப்பயிலரங்கில் கலந்து பயன்பெற வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இப்பயிலரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்கு வசதியாக 8.2.2008 க்குள் தங்களது வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். பதிவுக்கட்டணம் ரூ 50. பதிவுக் கட்டணத்தை நிகழ்சியின் போது செலுத்தினால் போதுமானது.
நிகழ்சிக்கான ஏற்பாடுகளை சேலம் மௌலவி அபூதாஹிர் பாகவி (பேச: 9443771520) அவர்களும் மதுரை பீர் முஹம்மது பாகவி (பேச: 9443979187) அவர்களும் செய்து வருகிறார்கள்.மேல்விவரம் வேண்டுவோர் இவர்களை தொடர்பு கொள்ளவும்.
இப்படிக்கு
மௌலவி,அ.அப்துல் அஜீஸ் பாகவி
(லிபாஸிற்காக)