Wednesday, September 14, 2011

மரியாதைக்குரிய ஹாஷிம் சாஹிப் அவர்களுக்கு

தாங்கள் ஜாமியா அல்பாகியாதுஸ் ஸாலிஹாத்தின் செயலராக பொறுப்பேற்றதிலிருந்து சிறப்பான பல காரியாங்களை நிறைவேற்றினீர்கள். அல்ஹம்து லில்லாஹ். ஜஸாக்கல்லாஹ்.

அதே நேரத்தில் மூர்க்கத்தனமான உங்களது சில நடவடிக்கைகள் பாகியாத் அரபுக்க்ல்லூரிக்குள்ளும் தமிழக் மக்களிடமும் பலத்த அதிருப்தியை ஏற்படுத்த்யது.

பாகியாத் என்பது உங்களிடம் ஒப்படைக்கப் பட்ட அமானிதம் என்பதை நீங்கள் பொறுப்பேற்ற ஆரம்ப காலத்தில் உணர்ந்து மிகச் சிறப்பாக செயல்பட்தை நாங்கள் அறிவோம்.

காலப்போக்கில் தங்ககளை சிலர் தவறாக வழி நட்த்தியதால், அல்லது தங்களுடைய ஜமீன்தாரி மனப்போக்கினால் பாகியாத்தின் வரலாற்றில் தீய பல முடிவுகளை எடுத்தீர்கள். அதனால் பலமான் அதிருப்தி அடைந்த தமிழக மக்கள் பாகியாத்தின் மீது கொண்டிருந்த மரியாதையின் காரணத்தினாலும் தங்களது பிரம்மாண்டமான பண வச்தியின் மீது கொண்ட அச்சத்தினாலும் பொறுமை காத்தார்கள்.

பாகியாத்திற்கு சேவை செய்வதை தங்களது வாழ்க்கை இலட்சியமாக கொண்டு பாகியாத்தின் புகழ் உல்கெலாம் பரவ காரணமாக் இருந்த கடப்பா அப்துல் ஜப்பார் ஹஜ்ரத் எச். கமாலுத்தீன் ஹஜ்ரத் , பிஎஸ்பி ஜைனுல் ஆபிதீன் ஹஜ்ரத் உள்ளிட்ட பாகியாத்தின் மூத்த பேராசிரிய பலரையும் பாகியாத்தின் பைலாவில் இல்லாத ரிட்டயர் மெண்ட என்ற வார்த்தையை பயன்படுத்தி வீட்ட்டுக் அனுப்பினீர்கள்.

உங்களாலும் உங்களைச் சார்ந்தவர்களாலும் அடிக்கடி நினைவு கூறப்படுகிற தேவ்பந்த அரபுக்கல்லூரியில் ஆசிரியர்களை மாணவர்கள் தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டு வந்து வகுப்பறையில் உட்கார வைப்பதையும் அவர்களது வாயுக்கு நேரே மைக்கை வைத்து அதன் வழியாக பாடம் கேட்கும் நடை முறை இருப்பதையும் நீங்கள் அறியாமல் போனதென்ன? உங்களது ஊர்க்கார்ர் மொளாலான யாகூப் ஹஜரத் இன்னும் காஷிபுல் ஹூதா அரபுக்கல்லூரியில் நாஜிராக தொடர்வதையும் நீங்கள் உணராமல் போனதேன்ன?

நீங்கள் ஜாமியா அல்பாகியாத்தின் பேராசிரியர்களை உங்களது தோல்மண்டியின் துப்புறவுப் பணியாளர்களைப்போல நட்த்துகிறீர்கள் என்பதை மர்ஹ்ம் கமாலுத்தீன் ஹ்ஜரத் அவர்கள் தங்களிடம் நேரடியாக குறிப்பிட்டிருப்பதை நீங்கள உணரவே இல்லை போல தெரிகிறது.

இந்த ஆண்டு அல்பாகியாத்தின் இரண்டு மரியாதைக்குரிய உஸ்தாதுகளை பணி நீக்கம் செய்துள்ளீகள். மொலானா சலீம் ஹ்ஜ்ரத், மௌலானா முஹ்தார் ஹ்ஜ்ரத் ஆகிய இருவரும் தகுந்த காரண்ம் இன்றி உங்களால் நீக்கப்பட்டுள்ளார்கள். இதில் ஒருவர் மூத்த ஆசிரியர்ர், மற்றொருவர் உயர் வகுப்புகளுக்கு பாட்ம் நட்த்துகிறவர். பாகியாத்தில் தற்போது உங்களாலும் உங்களைச் சார்ந்தவர்களாகும் திணிக்கப்பட்டுள்ள தகுதி அற்ற பலரையும் விட தரத்திலும் தகுதியிலும் உயர்ந்தவர்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர்களை உங்களது வீட்டு வேலைகார்ர்களை விட கேவலமாக நட்த்தியுள்ளிர்கள்.

முஹதார் உஸ்தாது உங்களது வீட்டை தேடி வந்து நீங்கள் தூங்கி எழும் வரை காத்திருந்து உங்களை சந்தித்து “ என் பிள்ளைகள் இங்குள்ள பள்ளிக் கூடங்களில் படிக்கிறார்கள். அவர்களை நான் திடீரென வேறு ஊருக்கு மாற்ற முடியாது ஆக்வே இந்த ஒரு வருட்த்திற்கு இங்கு பணியாற்ற அனுமதியுங்கள் என்று கேட்ட போது “யாரை கேட்டு உங்களது பிள்ளைகளை இங்கு கூட்டிட்டு வந்தீங்க!”பாகியாத் நிரந்தரம்னு நெனச்சீங்களா? என்று கேட்டுள்ளீர்கள்.

செயலாளர் அவர்களே! மேல்விஷாரத்தின் மலிக்கான உங்களிடமிருந்து பிர் அவ்னிய அகம்பாவத்தில் இந்தச் சொற்கற்கள் வெளியாகி உள்ளன.

எங்களுக்கு சோறு போட்டீர்கள் என்பதற்காக எங்களுக்கு தீனை கற்பிக்கிற உஸ்தாதுகளிடம் நீங்கள் இவ்வாறு நட்ந்து கொள்வதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.

மறந்து விடாதீர்கள்! துன்யாவை நிரந்தரமானது என்று கருதியா நீங்கள் சொர்க்கத்தை போல மாளிகை கட்டி அதில் வாழ்கிறீர்கள்?

நல்ல வேளை. என்னை கேட்டா புள்ள பெத்தீங்க என்று கேட்காமல் விட்டீர்கள். அந்த அளவில் தமிழ் பேசும் ஆலிம்களின் மானம் தப்பித்தது.

தங்களுடை இந்த பேச்சும் நடவடிக்கையும் எங்களையும் எங்களை போன்ற தமிழக மற்றும் கேரள ஆலிம்களை பெரிதும் பாதித்துள்ளது. ஆழ்ந்த மனவருத்த்தை கொடுத்துள்ளது.

ஆக்வே! தகுந்த காரணமில்லாமல் வெளியேற்றப் பட்டுள்ள உஸ்தாதுகளை மீண்டும் உடனடியாக பணியில் சேர்க்குமாறு மிக்க அன்புடனும் பணிவுடனும் உங்களை கேட்டுக் கொள்கிறோம்.- பிச்சை போடுகிற மாதிரி இல்லாமல் மனிதாபி மானத்துடனும் மரியாதையுடனும் அவர்கள் விச்யத்தில் நட்ந்து கொள்ளுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறோம்.

இப்போதைக்கு தமிழக்ம் முழுக்க பரவியுள்ள பாகவிகள் ஒரு சிலரின் கோரிக்கை இது. நாங்கள் மொத்தமாக உங்களது வீட்டுக்கு முன் – அல்லது பாகியாத் பற்றிய முடிவுகளை தீர்மாணிக்கிற காஷிபுல் ஹுதா அரபிக்கல்லூரிக்கு முன் - திர்ண்டு வந்து ஒரு அழுகைப் போராட்ட்த்தை நட்த்தினால் தான் உங்களது மனம் இரங்கும் என்றால் அதற்காகவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் எனபதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேரிய வ்ழையையும் அதன் படி செயல்படும் வாய்ப்பையும் தந்தருள்வானாக!

தங்களன்புள்ள

1
எண் பெயர் முகவரி பட்டம் பெற்ற் ஆண்டு கையொப்பம்
1 மொள்லவி அப்துல் அஜீஸ் பாஜில் பாகவி
இமாம், கரும்புக்கடை பள்ளிவாசல், கோவை
போன்: 1986


2011- ஜாமியா அல்பாகியாத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்ட உஸ்தாதுகளை மீண்டும் பணியில் சேர்க்குமாறும் உஸ்தாதுகளை பணியில் சேப்பதிலும் நீக்குவதிலும் பாக்கியாத்தின் பாரம்பரிய அணுகுமுறைகளை கடைபிடிக்குமாறு நாங்கள் கோருகிறோம்.


We request that the proffessors dissmissed from jamia al baqiyathus salihath in sep 2011 be reinstated immidiatly and we also humbly request you to follow the procedures and ruls of laid down by baqiyathus salihath in appointing and dissmising of the proffessors in future.

Name & Address Year of passing Signatur