Saturday, March 3, 2012

திருச்சி தமிழ் மாநில மாநாடு

லஜ்னத்துல் இர்ஷாத் பாகவி ஆலிம் சங்கம் (லிபாஸ்)
“தென்னிந்திய முஸ்லிம்களின் சமய அணுகு முறையில்
பாக்கியாத்தின் தாக்கம் ”
தமிழ் மாநில மாநாடு

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். வரஹ்
நேரம் : 03.2012 செவ்வாயன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி
இடம் : அல்முஹம்மதிய்யா பள்ளிவாசல் வளாகம். தஞ்சாவூர் சாலை. திருச்சி

நிகழ்வு முறை :
8.00 திலாவத் மஜ்லிஸ்
9.00 உற்சாகத்திற்கு ஒரு சொல் –உரை
10.00 மஸ்லக் கருத்தரங்கு
02,30 உரை வீச்சு
0.3.30 மதரஸாக்களின் பின்னடைவுக்கு காரணம் - பட்டி மன்றம்.
07.00 மாபெரும் மீலாதுப் பொதுக் கூட்டம்

பங்கேற்போர் :
சங்கை மிகு காந்தபுரம் ஷைக் அபூபக்கர் ஹஜ்ரத் (கேரளா)
சங்கை மிகு முஹம்மது குட்டி ஹஜ்ரத் (அதிராம்பட்டினம்)
சங்கை மிகு சித்தீக் அலி ஹஜ்ரத் (சேலம்)
சங்கை மிகு ஜஹீர் ஹஜ்ரத (பெங்களூர் )
மற்றும் பல மூத்த ஆலிம் பெருந்தகைகள்
மான மிகு திருமாவளவன்
பிரின்ஸ் பாரகலீத்

இந்நிகச்சியில் பங்கேற்க ஆலிம்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
தமிழகத்தில் வஹாபிஸத்தின் மர்மக் கூட்டாளிகளாக இருக்கிற சில கசப்பு சக்திகள் தமிழ முஸ்லிம்களின் பாரம்ரியத்தை உருமாற்றம் செய்ய முயற்சி செய்து, அந்த முயற்சியில் வெகு தூரத்திற்கு வந்து விட்டனர். இந்த மாநாடு நமக்கு தெளிவுமிக்க தீர்வுகளை தருகிற நோக்கில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது,

ஆர்வம் மிக்க ஒவ்வொரு ஆலிம் பெருந்தகையும் இந்த மாநாடு தாம் கடமையாற்றுவதற்குரியது என்ற எண்ணத்தோடும் எழுச்சியோடும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். தயவு கூர்ந்து உங்களது வருகையை : 9865619562 என்ற எண்ணில் அழைத்து அல்லது SMS மூலம் பதிவு செய்யவும்.
இப்படிக்கு
லிபாஸ்

ரயீசுல் இஸ்லாம் ஹஜ்ரத் வபாத்

வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அர‌பிக் க‌ல்லூரியின் முன்னாள் பேராசிரிய‌ர் அல்ஹாஜ் ம‌வ்லானா ம‌வ்ல‌வி N. ர‌யீசுல் இஸ்லாம் ஹ‌ஜ்ர‌த் கிப்லா (சுமார் 85 வ‌ய‌து)
அவ‌ர்க‌ள் உட‌ல் ந‌ல‌க் குறைவால் 28-02-2012 செவ்வாய்க்கிழமை ம‌திய‌ம் சுமார் 3.00 ம‌ணிய‌ள‌வில் வேலூரில் வ‌ஃபாத்தானார்க‌ள்.

அன்னாரின் ஜ‌னாஸா புத‌ன்கிழ‌மை 29-02-2012 ளுஹ‌ர் தொழுகைகுப் பின்ன‌ர் வேலூரில் ந‌ல் அட‌க்க‌ம் செய்ய‌ப்ப்பட்டது. ஜ‌னாஸா தொழுகை வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அர‌புக்க‌ல்லுரி பள்ளிவாசலில் நடைபெற்றது.

ஜனாஸா தொழுகைக்கு முன் பாகியாத் அரபுக்கல்லூரியில் நடை பெற்ற இரங்கல் கூட்டத்தில் பாகியாத்தின் முதல்வர் உஸ்மான் முஹ்யித்தீன் ஹஜ்ரத், பெங்களூர் அஸ்ரப் அலி ஹஜ்ரத், ஜஹீர் ஹஜ்ரத், லிபாஸின் பிரதிநிதிகளாக மௌலவி அப்துல் அஜீஸ் பாகவி, மௌலவி யூசுப் பாகவி ஆகியோருடன் பாகியாத்தின் முன்னாள் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஜனாஸா தொழுகையில் பாகியாத்தின் செயலாளர்,ஹாஷிம் சாஹிப் ஷப்பீர் அலி ஹஜ்ரத், பி.எஸ்.பி ஹஜ்ரத் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்ட மிகுதியின் காரணமாக பள்ளிவாசலில் உட்பகுதியில் ஜனாஸா தொழுகை நடத்தப் பட்டது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு மதிய உணவு மதரஸாவின் சார்பில் அஜீஜிய்யா ஷாதி கானாவில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து, தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் அனைவ‌ரும் துஆ செய்வோமாக‌. ஆமீன்