Monday, October 24, 2011

Saturday, October 15, 2011

பாகவிகள் சந்திப்பு பற்றி உருது பத்ரிகை செய்திகள்



பாகவிகள் சந்திப்பு பற்றி இரண்டு உருது பத்ரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

Wednesday, October 12, 2011

அஃலா ஹஜ்ரத் நினைவு விழா

காலை உணவு இடைவேளை







இரண்டாம் அமர்வு









முதல் அமர்வு










அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ்வின் கிருபையால் அகில இந்திய பாகவி ஆலிம்களின் சந்திப்பு அறிவிக்கப் பட்டிருந்த படி 11.10.2010 செவ்வாயன்று காலை காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவைரை வேலூரில் எழுச்சியோடு நடைபெற்றது.


அலைஅலையால மக்கள் கூடினர் என்று சொல்வது தான் சாதாரண வ்ழக்கம், ஆனால் இந்த சந்திப்பு நிகழ்ச்சியை அலைஅலையான இடையூறுகளையும் தடைகளையும் தாண்டி அல்லாஹ் வெற்றி பெறச் செய்தான். அஃலா ஹஜ்ரத்தின் துஆ தம்மோடு இருந்தது என பாகவிகள் நெக்குறுகினர்.

தமிழக அமைச்சர் முஹம்மது ஜான், தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ், சர்ர்ச்சைக்குரிய சென்னை செல்வந்தர் அப்பல்லோ ஹனீபா தமிழக ஜமாத்துல் உலமா தலைவர் அப்துர் ரஹமான் மிஸ்பாஹி ஹஜ்ரத் உள்ளிட்ட பலர் தற்போதைய பாகியாத் நிர்வாகக்குழுவின் செயலாளர் மலுக்கு முஹம்மது ஹாஷிமின் செல்வத்துக்கு சேவகம் செய்து இச்சந்திப்பை தடுக்க முயன்றதாக தகவல் தெரிவித்தன.

எனினும் நல்லவர்களின் துஆவும், பாகவி ஆலிம்களின் பக்குவமான அதே நேரத்தில் உறுதியான நடவடிக்கை களும் நிகழ்ச்சியை வெற்றிகரணமாகியது. அல்ஹம்து லில்லாஹ்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஈஸால் தாவ்பு எனும் துஆ நடைபெற்றது. நிகழ்ச்சி பற்றிய புக்கைப்படங்கள்,


Friday, October 7, 2011

வருக வருக

செய்லாளரிடமிருந்து

அன்புமிக்க பாகவிகளே அஸ்ஸலாமு அலைக்கும்.

11.10.2011 அன்று வேலூரில் நடைபெற உள்ள நம்முடைய சந்திப்பு நிகழ்ச்சிக்கான் ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

நிகழ்ச்சி குறித்த தகவல்களை அவ்வப்போது நம்முடைய இந்த பிளாக்கில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

இப்போது கல்ந்து கொள்வோர் தங்களது பெயர்களை விரைவாக பதிந்து வருகின்றன. பல நூற்றுக்கணக்கான பாகவிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழ் மளையாள்ம் உருது மொழிகளைச் சேர்ந்த பல மூத்த முன்னாள் பாகவிகளும் இக்கூட்டத்தில் கலந்த விருப்பம் தெரிவித்துள்ளனர்.

நீங்களும் கலந்து கொள்ள முடிவு செய்தால் உங்களுக்கான வசதிகளைச் செய்வதற்கு வசதியாக கீழ் கானும் எண்ணில் உங்களது பெயர் மற்றும் தொலை பேசி எண்ணை sms செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அப்துல் கையூம் மௌலானா பாகவி 9094965052

வஸ்ஸலாம்.

Monday, October 3, 2011

செருசேரி ஜைனுத்தீன் முஸ்லியாருடன் லிபாஸ் குழுவினர் சந்திப்பு

இந்தியாவின் தலை சிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவரும் கேரள சமஸ்தாவின் பொதுச் செயலாளருமான செருச்சேரி ஷைகுனா ஜனுத்தீன் முஸ்லியார் மற்றும் தாருல் ஹுதா பல்கலை கழகத்தின் துணைவேந்தர் பஹாவுத்தீன் முஹம்ம்து நத்வி ஆகியோரை லிபாஸ் குழுவினர் சந்தித்தனர்.




A.P. முஸ்லியாருடன் லிபாஸ் குழுவினர் சந்திப்பு




இன்ஷா அல்லாஹ் வருகிற 11.10.11 அன்று வேலூரில் நடைபெறுகிற பாகவிகள் சங்கம் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுப்பதற்காக லிபாஸ் குழுவினர் கேரளா ஸகாபுத்துஸ்ஸுன்னிய்யாவின் நிறுவனரும் உலகப்புகழ் பெற்ற பாகவிகளில் ஒருவருமான A.P. அபூபக்கர் முஸ்லியார் அவர்களுக்கு அழைப்பு விடுத்தனர். அன்னார் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

Sunday, October 2, 2011

“பாகியாத்தின் இன்றைய நிலையும் பாகவிகளின் பொறுப்பும்”
>
பாகவிகள் கலந்தாய்வு


இன்ஷா அல்லாஹ் வரும் 11.10.2011 செவ்வாயன்று வேலூரில் காலை 8 மணி முதல் “பாகியாத்தின் இன்றைய நிலையும் பாகவிகளின் பொறுப்பும்” என்ற கருத்தை மையமாமா கொண்டு ஒரு கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, மற்றும் ஆந்திராவிலிருந்து பாகிவிகள் பங்கேற்கவுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
9443201037 9443709706 98043665506 9976104473 98402 77450

பாகவிகள் அனைவரையும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
முன்பதிவு அவசியம்.

இங்கனம்
லஜ்னத்துல் இர்ஷாத் பாகவி ஆலிம்கள் சங்கமம்.